Wednesday, June 23, 2010

&& பார்வை &&


சாலையை


கடக்க உதவிய பின்,

"பார்த்துப் போங்க"

என்ற

என்னைப்பற்றி

என்ன நினைத்திருப்பார்

அந்த பார்வையற்றவர்?!





Thursday, June 10, 2010

பூக்களும், நார்களும்!


"பூவோடு சேர்ந்த நாரும்

மணம் பெறும்..."

சிரித்தன பூக்கள்!

"நாங்கள் இல்லையென்றால்

நீங்கள் உதிரிப்பூக்களே..."

நினைத்தன நார்கள்!




Monday, June 7, 2010

ஆனந்த குளியல்


குளிக்கத் தடை விதிக்கப்பட்ட

நீர்த்தேக்கத்தில் ஆனந்தமாகக்

குளிக்கின்றன முதலைகள்!












குழந்தையின் சிரிப்பு