நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தை டைரக்டர் ஜெயம் ராஜா இயக்குகிறார். படத்திற்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டியுள்ளனர். 50வது படமான சுறா தந்த ஏமாற்றத்தினூடே விஜய் தனது 51வது படத்தில் அசினுடன் ஜோடி போட்டு ஆடி வருகிறார்.
சித்திக் இயக்கும் அந்த படம் மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன பாடிகார்ட் படத்தின் ரீ-மேக். இப்படத்திற்கு முதலில் காவல்காரன் என பெயர் சூட்டினார்கள். பின்னர் அந்த தலைப்பு பரிசீலனையில்தான் இருக்கிறது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜய் நடிக்கப் போகும் 52 படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை இயக்கப் போகிறவர் டைரக்டர் ஜெயம் ராஜா.
படத்திற்கு வேலாயுதம் என பெயர் சூட்டியிருக்கிறார்களாம். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து ஜூலை மாத இறுதியில் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.